வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

மின்னஞ்சல் முகவரி யாருடையது ?

மின்னஞ்சல் முகவரி யாருடையது ?


மின்னஞ்சல் முகவரி யாருடையது என்பதினை கண்டு பிடிக்க இந்த இனைய தளம் நமக்கு உதவுகிறது.உரிமையாளரின் அணைத்து தகவல்களும் நமக்கு குடுகின்றது.மற்றும் பல்வேறு விதமான செயல் பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.இனைய தள முகவரி Click Here!dasisaroon

Orkut தளத்தின் User-களை குறி வைக்கும் வைரஸ்

Virus Targeting Orkut UsersDear All Internet Users,This is to bring to your notice about a malicious worm "Scrapkut"� that has hit most of the social networking sites and is fast targeting Orkut users. Similar attacks on Facebook, MySpace and Yahoo! MediaGrid have also come to light in recent weeks.How does it work?A malicious scrap message is posted to victim's scrapbook containing a fake link to YouTube video looking as if it is from a known member of its friend list.When the victim clicks on the link, it's redirected to some malicious website which prompts you to download the file "flashx_player_ 9.8.0.exe"� disguised as a flash upgrade and the victim's whole system comes under the virus attack.

The active Orkut virus was tracked on Friday last week while other viruses have been active on several other social networks for a few weeks now.On Facebook and MySpace, the user may be caught unaware while uploading photographs. After executing the malicious code, disguised as flash memory, the Scrapkut virus downloads further exe files to perform malicious actions on victim system. The downloaded file exe files copies itself to different locations to ensure its execution on every start-up of infected system.When a user visits Orkut and starts a session from the infected system, the exe file injects a malicious code into the active Orkut web session. You are under virus attack and your friends end up getting fake mails (ones you never sent) from you.Precautionary Measures as suggested by cyber security wing of the department of information technology (DIT):Users should be cautious while visiting any link provided in Orkut or any social networking siteEnsure that the latest patches and fixes are installed for the operating system and application softwaresThe antivirus and antispyware signatures should be up-to-dateDo not visit untrusted websites.

Thursday

கால்சியம் பற்றி கொஞ்சம்....


மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?


கல்சியம் மாத்திரைகள் எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்? என மேலதிக கல்சியம் எடுப்பது பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியானபோது பலர் மேலும் ஒரு சில சந்தேகங்களை எழுப்பினர். அதில் முக்கியமானது ஆண்களுக்கும் கல்சியம் தேவையா என்பதாகும்.


ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் ஏற்படுவது உண்மையே. வயதான காலத்தில் இடுப்பு எலும்பு முறிவடைவது (Hip Fracture) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இடுப்பு எலும்பு முறிவுகளை எடுத்தால் அவற்றில் கால் பங்கு (1/4) ஆண்களிலேயே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

அதற்கும் மேலாக முப்பது சதவிகிதமான (30%) வயதான ஆண்களில் வெளிப்படையாகத் தெரியாத மென்வெடிப்புகள் ( Fragility Fractures) ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் என்பது ஒரு பிரச்சினையே என்பது தெளிவாகிறது.

இவ்வாறாக இருந்தபோதும் ஒஸ்டியோபொரோசிஸ் சம்பந்தமான ஆய்வுகள் ஆண்களில் அதிகம் செய்யப்பட்டதில்லை. பெண்களிலேயே பெரும்பாலும் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த "பாரபட்சத்தை' நிவர்த்திக்குமுகமாக நியூஸிலாந்தில் ஆண்களில் ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. 24 மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வின்போது மேலதிக கல்சியம் கொடுக்கப்பட்ட ஆண்களின் எலும்புத் திணிவு குறியஈடு (BMI) அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டது. எனவே, ஆண்களுக்கும் மேலதிக கல்சியம் உதவும் என்பது தெளிவாகிறது.

எவ்வளவு கல்சியம் தேவை. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1200 மி.கி. கல்சியம் தேவைப்படுகிறது. அத்துடன், தினமும் 400 முதல் 600 மி.கி. வரையான விற்றமின் "டி'யும் தேவைப்படுகிறது.

அதில் ஓரளவு கல்சியத்தை பால், மற்றும் தயிர், யோக்கட், சீஸ் போன்ற பாற் பொருட்களிலிருந்தும் தினமும் பெற முடியும். ஒரு கப் பால் அல்லது 8 அவுன்ஸ் கொழுப்பு நீக்கிய யோக்கட் உண்பதன் மூலம் எமது தினசரி கல்சியத் தேவையின் அரைவாசி அளவைப் பெற முடியும்.

மிகுதியை கல்சியம் மாத்திரைகளாகக் கொடுக்கலாம். எனவே, வயதான ஆண்களுக்கு தினமும் 600 மி.கி. போதுமானதா அல்லது 600 மி.கி. இரண்டு தடவைகள் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி அறிய மேலும் ஆய்வுகள் உதவக்கூடும்.

ஆயினும், எலும்பின் உறுதிக்கு இவை மட்டும் போதாது. போதிய உடற்பயிற்சி செய்தால் தான் எலும்புகளும் அதனைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் பெறும். எனவே, ஓடுவது, வேகமான நடை, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளும் அவசியம். இதன்மூலம் வயதான ஆண்களும் தமது எலும்புகளின் உறுதியைப் பேணி விழுகைகளையும் எலும்பு முறிவுகளையும் தடுக்க முடியும்.

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?


“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்று

அல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.


ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.

எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.


எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.

எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.

கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.

எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.

கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.

கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.

இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.

அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.

கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.

எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.
பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது

கல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.

இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan பரிசோதனையை இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.

எடையைக் குறைக்க

எடையைக் குறைக்க ...சில அற்புத வழிகள்

எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.


.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.

எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்

மேலும் படிக்க
இங்கே கிளிக் செய்யவும்

மனநிலை .....

எதிலும் நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்

'எப்பொழுதும் நல்லதை எண்ணுங்கள்,
நல்லதைப் பேசுங்கள்,
நல்லதையே செய்யுங்கள்.

வாழ்வில் அவநம்பிக்கை கொள்ளாதீகள்.

எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

மறை எண்ணங்கள் வேண்டாமே.

நல்லதை நினைத்தால்,
வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
நீடித்த வாழ்வு கிட்டும்.'

இவ்வாறு சொல்லாத அறிஞர் அல்லது ஞானிகள் இருக்க முடியாது.

ஆனால் எவர் எதைச் சொன்னாலும், எத்தனை தடவைகள் இத்தகைய நல்ல வார்த்தைகளைக் கேட்டாலும் எமது குரங்கு மனம் அடங்குவதில்லை. மறை எண்ணம் கொண்டு கவலையுறவே செய்யும்.

ஆனால் விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இது வெற்று நம்பிக்கையல்ல, நிரூபிக்கப்படக் கூடிய உண்மையும் கூட என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பெண்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்ற நம்பிக்கை உணர்வு கொண்ட பெண்களுக்கு
(Optimistic women) மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும், வேறு காரணங்களால் மரணம் வருவதற்குமான வாய்ப்பும் குறைவு என்கிறது.


மாறாக நடப்பவை எதிலும் நம்பிக்கையற்று, மற்றவர்களில் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் (pessimistic women) பெண்களுக்கு மரணம் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இருந்தபோதும் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பில் மாற்றம் இருக்கவில்லை என மேலும் சொல்கிறது அந்த ஆய்வு.மாதவிடாய் முற்றாக நின்றுவிட்ட 50 வயது முதல் 79 வயதுவரையான 97,253 பெண்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நம்பிக்கையுணர்வுள்ள பெண்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதத்தாலும், ஏனைய காரணங்களால் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதத்தாலும் குறைந்திருந்தது.

ஆனால் நம்பிக்கை வரட்சி கொண்ட பெண்களில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 16 சதவிகிதத்தால் அதிகரித்திருந்தது.

நம்பிக்கை உணர்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் இனத்திற்கும் (Race) பங்கு உண்டாம். நம்பிக்கையுணர்வுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அடுத்த 8 வருடங்களில் மரணிப்பதற்கான வாய்ப்பு 33 சதவிகிதம் குறைவாக இருந்ததாம். ஆனால் அதே கால இடைவெளியில் வெள்ளையினப் பெண்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு 13 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்ததது.

பொதுவாக நம்பிக்கை உணர்வு கொண்டவர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, மனச் சோர்வு அறிகுறிகள் போன்றவை குறைவாகவே இருப்பதுண்டு.

அத்துடன் புகைத்தல், மற்றும் உடலுழைப்பின்றி சோம்பேறி வாழ்க்கை வாழ்தல் ஆகியவையும் அதிகம் காணப்படுவதில்லை.

இவற்றைக் கணக்கில் எடுத்த போதும், நம்பிக்கை உணர்வுள்ளவர்களிடையே மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் அடைதல் ஆகியன குறைவாகவே இருந்தததாக ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தினர்.

இது பெண்களுக்கான ஆய்வுதானே என்று எண்ண வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் ஆண்களில் டச் மருத்துவர்களால் செய்யப்பட்ட ஆய்வும் இதே முடிவையே கொண்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது.

எனவே எல்லோருக்கும் பொருந்தும்.

ஓப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது
வயதில் குறைந்தவர்கள்,
கல்வியறிவு அதிகமுள்ளவர்கள்,
பொருளாதார ரீதியாக வசதியுள்ளவர்கள்,
சமய நிகழ்வுகளில் வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்பவர்களிடையே நம்பிக்கை உணர்வு அதிகம் இருந்ததையும் இந்த ஆய்வில் கண்டறிந்தார்கள்.


எனவே எமது வாழ்நாளை அதிகரிப்பதற்கு வாழ்விலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை உணர்வை வளர்ப்பது அவசியமாகிறது.

நீண்ட நாள் வாழ்வதற்காக மட்டுமின்றி மகிழ்ச்சியுள்ள பயனுறு வாழ்வாக அமைவதற்கும் அதே நம்பிக்கை உணர்வுதானே காரணமாகிறது.

அழு மூஞ்சியை கழுவித் துடைத்து எறிந்து விட்டு நம்பிக்கையோடு புன்னகைக்கும் வதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அது சரி. கீழே உள்ளவரின் நம்பிக்கையும் நேர் எண்ணத்தில் (Positive Thinking) அடங்குகிறது அல்லவா?

இவர்களை எந்த இடத்தில் சேர்த்துக் கொள்வது?

கொத்தமல்லி

கொத்தமல்லி மருத்துவ குணங்களும், ஒவ்வாமையும்“கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.” என்ற கருத்துப்பட மதிப்பிக்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

“இதற்கு மருத்துவ ஆய்வு ஏன்? அனுபவ ரீதியாக நாங்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.” என நீங்கள் சொன்னால் அதனோடு ஒத்துப் போகவும் நான் தயாராகவே உள்ளேன்.

மேற் கூறிய கருத்தரங்கிற்குப் பின்னர் தடிமன், உடல் அலுப்பாக இருந்தபோது பரசிட்டமோல் போடுவதற்குப் பதிலாக மல்லிக் குடிநீர் குடித்துப் பார்த்தேன். பல மணிநேரங்களுக்குச் சுகமாக இருந்ததை அனுபவத்தில் காண முடிந்தது. சிறு வயதில் அம்மா அவித்துத் தந்த குடிநீரை பல தடவைகள் குடித்திருந்தபோதும் அதன் பலன்கள் பற்றி இப்பொழுது தெளிவாகச் சொல்வதற்கு முடியவில்லை.

இருந்போதும் இன்றும் தடிமன் காய்ச்சலுக்காக மருந்துவரிடம் செல்லும் பலர் அதற்கு முன்னர் மல்லி சேர்ந்த குடிநீர் உபயோகித்ததாகச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் என்ன? பலருக்கும் முதல் உதவியாக, கை மருந்தாக அது உதவுகிறது என்பதே. அதற்கு குணமடையாவிட்டால் நவீன மருத்துத் துறை சார்ந்தவர்களை நாடுகிறார்கள்.

இணையத்தில் தேடியபோது தடிமன் காய்ச்சல், மூட்டு வலிகள், உணவு செமிபாடின்மை, பசியின்மை, ஒவ்வாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க கொத்தமல்லி உதவும் எனப் பலரும் எழுதியிருந்தார்கள். இவை பெரும்பாலும் அனுபவக் குறிப்புகள். சில வீட்டு வைத்திய முறைகள். ஆயினும் இவை எதுவுமே விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது.

வாசனைத் ஊட்டிகள் (Spices) பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தால் கொத்தமல்லி பற்றிய பதிவு மிகவும் தொன்மையானது எனத் தெரியவரும். பைபிளில் இது பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. நாம் அவற்றின் விதைகளையும், தளிர்களையும் சமையலில் பயன்படுத்துகிறோம்.

முன்னைய காலங்களில் பல்லி மிட்டாய்களின் உள்ளே சீரகம், மல்லி ஆகியவற்றை வைத்திருந்தமை சிலருக்கு ஞாபகத்தில் வரலாம். ஆயினும் கொத்தமல்லி என்பது விதை அல்ல. உண்மையில் அது காய்ந்த பழம் என்பதையும் குறிப்பட வேண்டும். தாய்லாந்தில் அதன் தளிரும், வேரும் சேரந்த பேஸ்ட் (Paste) உணவுத் தயாரிப்பில் முக்கியமானதாம்.

கொத்தமல்லி மிகவும் பாதுகாப்பான உணவு என்று நம்பப்பட்ட போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவ ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. 50 and 56 kDa, 11 kDa ஆகிய ஒவ்வாமையை ஏற்படுத்தும் (Allergns ) பொருட்கள் அதிலுள்ளனவாம். கொத்தமல்லி மாத்திரமின்றி அதைப்போன்ற அபியேசியே (Apiaceae) இனத்தைச் சார்ந்த வேறு பல கறிச்சரக்கு மூலிகைகளுக்கும் (Coriander, Caraway, Fennel and Celery) இவ்வாறு ஒவ்வாமை ஏற்படலாம் என அறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியதும் கொத்தமல்லி அலர்ஜிப் பண்டம் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். உணவு அலர்ஜி என்பது குறைவாகவே மக்களைப் பீடிக்கிறது. அவ்வாறான உணவு அலர்ஜிகளிலும் கறிச்சரக்கானது வெறும் 20சதவிகிதம் மட்டுமே. கறிச்சரக்கில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்களில் மல்லியும் ஒன்றுதான். எனவே மல்லியை அலர்ஜி என ஒதுக்க வேண்டியதில்லை.

ஆயினும் உணவு அலர்ஜி உள்ளவர்கள் தமது ஒவ்வாமைக்கான காரணங்களாக நண்டு, இறால், கணவாய், அன்னாசி, தக்காளி எனப் பட்டியல் இடும்போது கறிச்சரக்குக்காக இருக்குமா என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

Wednesday

இலங்கை தற்கொலை படையினரை பற்றிய ஒரு வீடியோ

நம் காதல்...

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...! 

நண்பர்களுக்கு சில ஆலோசனைகள்

நண்பர்களே நீங்கள் நல்லவர்களாக இருங்கள் !!!


நாம் செய்யும் தப்பு யாருக்கும்  தெரியாது  என்ற நினைவில்  தவறு  செய்யாதீர்கள்!!

  நாம் செயும்  எல்லா செய்யலுக்கும் ஆண்டவன் ஒருவன் கணக்கு வைத்து கொண்டிருக்கிறான்  !!!
ஒரு விஷயம் ninaivil  இருக்கட்டும்  எந்த ஒஉர் செயைலுக்கும் கண்டிப்பாக எதிமர்மறை  செயல் இருக்கும்!!!

இது தான் நீவ்டனின்  மூன்றாம் விதி அது நமது வழகைக்கும் கண்டிப்பாக  அமல்  ஆகும் !!

Monday


KADHAL

நான் நடிப்பது
தெரியாததுப் போல்
நெற்றியில் முத்தமிடும்
உன் பாசாங்கும்

நீ முத்தமிட
வேண்டுமென்பதற்காக
தூங்குவதாய் நடிக்கும்
என் பாசாங்கும்தான்
காதலோ?!!

Sunday

இலஞங்கர்களின் அட்டகாசம்

நண்பர்களே  !! நானும் ஒரு இளஞ்சன் தான்.  இருந்தாலும் சில இலஞ்சர்களின் அட்டகாசத்தை என்னாலய பொறுக்க முடியவில்லை  என்பது தான் உண்மை!!
கடந்த 06 .2 .2009 அன்று கும்பகோணம் - காரைக்கால்  செல்லும் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன் அப்போது பஸ்சில் ஒரு கல்லூரி பட்டாளம் ஏறியது. அஆளுகு கைல ஒஉர் செல் போன். பஸ்சில் சரியான கூடம்.,  மூச்சு விட கூட தினரகொண்டிருந்தோம் . அப்போது ஆற்ம்பிதர்கள் அந்த பட்டாளம் ஒரு பாட்டு கச்சேரி யை ......
ஒருத்தன்  செல் போனில்  பாட்டு போட்டான்
"நேத்து ராத்திரி யம்மா........"  அந்த இரவு நேர பயணத்தில் அதிலும் பஸ்சில் சரி பாதி பெண்கள் நெருகியடிதிகொண்டு பயணிக்கும் நேரத்தில் இப்படியோரு பாட்டு!!!!
அதுக்கு இன்னொருத்தன் கொடுத்த கமெண்ட்:
"மச்சான் பாட்டு பிரமத்ம்டா..."
அடுத்தவன் சே இது என்ன பிரமாதம் இப்ப பாரு... (அவன் செல் போனில் )
"மாசி மாசம் ஆளான பொண்ணு... "
பஸ்சில் உள்ள அதனை பெரும் முகம் சுளித்தார்கள் அனால் அந்த இளசுகளோ இதை பற்றி கொஞ்சமும் கவளிபடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் .....
இன்னும் இது மாதிரி பச்சை பச்சையான பாட்டுகள் காரைக்கால் வரிக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தன....
நண்பர்களே தயவு செய்து அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்!!
இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் இல்லை!!!
உங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் இருகிருரர்கள் ...
பாட்டு கேட்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து ஹெட் போனில் பாட்டு கேட்டல் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடயாது !!