வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

                              




              
                                                                                                                  


சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக் கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக்கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

LOVERS' SPECIAL......



காதலர்களுக்கு ஓர் நற்செய்தி......



                               காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                       இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
                      இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

                      கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.             இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                  காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
                    இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். 
                   காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. 
                        இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Friday

பணம் வேணுமா பணம்..........





பணம் வேணுமா பணம்..........


இது முற்றிலும் இல்லவசமனது. 

முட்டு முழுதாக ஓர் சமூக இணையத்தளம். facebook, orkut, hi5 மாதிரி.... 

ஆனால் poplestring!!!! நீங்கள் friends add பண்ணும் போது உங்களுக்கு பணம் தருகிறார்கள். 

கேம் விளையாட கூட பணம் தருகிறார்கள். 

ஒவொரு நேரம் லாகின் லோகோப்ப் பண்ணும் போது பணம் தருகிறார்கள். 

அவர்களுடைய சர்ச் எஞ்சின் பயன்படுத்தும் போதும் கூட பணம் தருகிறார்கள். 

இது ஒரு மனித சங்கிலி மாதிரி தொடராக போய் கொண்டு இருக்கும். 
உங்களுக்கு கீழே இருக்கும் நண்பர்கள் அவர் நண்பர்களை சேர்த்து கொண்டு போகும்போது உங்கள் கணக்கில் தானாகவே பணம் ஏறிக்கொண்டு போகும். 

நீங்களும் இணைத்து பணம் சம்பதிதுதான் பாருங்களேன்.

Tuesday

காதலில் சில விடை தெரியாத கேள்விகள்


1. காதலிக்கும் பெண்ணின் முன்னால் ஏன் சில பையன்கள் சைக்கிளில், பைக்கில் எட்டு, பத்து எல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்

.
2. கெட்ட பையன்களையே ஏன் நிறைய பெண்களுக்குப் பிடிக்கிறது?



3. காதலிக்கிற இரண்டு பேரில் பையன் மட்டும் தேர்வில் தோற்கிறான். பெண் மட்டும் பர்ஸ்ட் க்ளாஸில் பாஸாகிறாள். இது எப்படி?




4. சில ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து பேரைக் காதலிக்கிறார்களே. இது எப்படி?


5. சிலருக்கு தங்கள் ஜாதியிலேயே காதல் வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை ஏன்?


6. பல பெண்கள் செட்டிலாகிட தங்கள் சொல் பேச்சு கேட்கிற பையன்களையே

காதலிக்கிறார்கள். காதலில் Pre-Plan பற்றி விளக்கங்கள் தரப்படவில்லை. ஏன்?


7. சிலர் பின்னிப் பிணைந்து காதலித்து விட்டு, சத்தமில்லாமல் வேறு வேறு ஆளைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது எப்படி?




காதல் என்றால் என்ன? 



என்னமோ தெரியலை,

அது வந்தா மட்டும் நெஞ்சு குறுகுறுக்குது என்கிறாள் ஒரு பதினாறு வயதுப்பெண்.
அவள் விளக்கத்தில், தனிப்பட்ட ஒரு நபரிடம் ஏற்படும் நெஞ்சுக் குறுகுறுவை காதல் என்கிறாள்.
மனதில் தோன்றுகின்ற உணர்வுகளில் மிகத் தூய்மையானது என்கிறார் ஜான் ட்ரைடன்.

'அந்தப் பொண்ணு பக்கத்திலேயே இருந்தால் பரவாயில்லை போல இருக்கு...'. என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். 'பரவாயில்லை' என்பதையே அவன் காதலாக உணர்கிறான்.

சிலருக்கு ஒரு பெண்ணை நினைத்து தூக்கம் வருவதில்லை.

                              மாவீரன் நெப்போலியன் கூட 'எனக்கு காதல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் ஜோஸ்பினிடம் மட்டும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.....' என்றார்.

காதல் ஜோக்குகள், காதல் கவிதைகள், காதல் படங்கள் எல்லாம் உலகத்தில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன

. "இந்த பூமி சுழல்கிற அச்சில் ஒரு முடிவடையாத காதல் இருக்கிறது" என்றான் ஒரு மகா கவிஞன்.

"என்ன சார் காதல்" காதலிச்சா எப்படி இருக்கும் தெரியுமா...?. மூட்டைப்பூச்சி மருந்தைக் குடிச்சிட்டு தூக்கிப்போய் ஆஸ்பத்திரியில் போட்டுக் காப்பாத்தி கூப்பிட்டு வரும் போது படற அவஸ்தை இருக்கே, அதுதான் சார் காதல் என்கிறார் ஒரு தத்துவவாதி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி, 'ஒன்றின் மேல் ஆழ்ந்த அன்பு...' என்று ஜடத்தையும் சேர்த்துப் பேசுகிறது.


வாழ்வு, காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்கு காமம் தேவைப்படுகிறது.
ஆனால், காதல்? காதலுக்கும் , காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள்.

காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர்வு நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்து விட்டன. சற்று கவனியுங்கள்.

காதலின் முதல் ஆரம்ப்புள்ளி 'லஸ்ட்', அடுத்த பால் மேடு மேற்படுத்துகிற காமத்துப்பால், கவர்ச்சி.

'அட இவன் பார்க்க நல்லா இருக்கானே..'. என்கிற வியப்பில் தொடங்குவது....

'கண்ணு பேசுது பாரு...' என்று சொல்லும்போது. உங்கள் கவனத்தில் தொடங்கி விடுகிறது. அந்த பெண் மேலான கவர்ச்சி இதைத் தொடங்கி வைப்பது எது தெரியுமா?


டெஸ்டரோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள். இவை பிறந்ததிலிருந்தே நம் உடலில் இருந்தாலும் பருவத்தில், பக்கத்தில் அந்த ஸ்பெஷலான கண்ணை வைத்திருக்கிற பெண்ணைச் சந்திக்கும் போது தான் விழித்துக் கொள்கின்றன. அடுத்த பாலை நோக்கி ஒரு push ஒரு தள்ளுமுள்ளுவை இந்த ஹார்மோன்கள் தான் செய்கின்றன.





'கண்ணு பேசுது பார்த்தியா...' கத்தி மாதிரி சுழலுது இல்ல…? என்றெல்லாம் பேசிவிட்டு கடந்தாகி விட்டது. அந்த பெண் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறாள். நீங்களும் எதிர்த் திசையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனம் தான் உங்களுடன் வர மறுக்கிறது. இன்னொரு முறை அந்த பெண்ணைப் பார்த்தால் மனதுக்கு இதமாக இருக்கும் போலத் தோன்றுகிறது. நண்பனிடம் 'ஒரு நிமிஷம் இரு' என்று பைக்கில் திரும்ப வந்த வழியே போய் மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்க்கிற மாதிரி 'யு டான்' அடித்து வருகிறீர்கள். மனம் சற்று அமைதியடைந்ததுபோல் இருக்கிறது. கூடவே அந்தப் பெண் ஒரு குட்டி செகண்ட் பார்த்தது வேறு இன்பமாக இருக்கிறது.

விஞ்ஞானிகள் இந்த நிலையை 'அட்ராக்ஷ்ன்' என்று வர்ணிக்கிறார்கள். கூடவே Love Structure phase என்றும் சொல்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக்? தடை என்று சொல்கிறீர்கள்?

அந்தப் பெண்ணை பார்த்த்திலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. பசியில் தடை, சரியாக தூங்க முடியவில்லை. தூக்கத்தில் தடை,. படிப்பில் கவனம் செல்லவில்லை. கவனத்தில் தடை, இந்த்த் தடைகளோடு தவிக்கும் நிலையை Fzlling love என்று வர்ணிக்கிறார்கள்.
பசி போச்சு, தூக்கம் போச்சு, படிப்பில் கவனம் போச்சு, எங்கேயோ பேய் அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்கை வேர்த்துப் போகிறது. ஒழுங்காக யோசிக்க கூட முடியவில்லை. வயிற்றில் பூச்சி பறக்கிறது. அதுவும் பெயர் தெரியாத பூச்சி. நெஞ்சிலோ பளப் பள பட்டாம் பூச்சிகள். இதெல்லாம் எப்படி வருகிறது? ஏன் நடக்கிறது? விஞ்ஞானிகள் இதற்குப் பதில் சொல்கிறார்கள்.


மூளையில் இருக்கிற டோப்பமைன் என்கிற மூன்றும் சேர்ந்து தான் இந்த Fzlling in Love நிலையில் எல்லா கிறுக்குத்தனங்களையும் செய்கின்றன என்கிறார்கள். இவற்றுக்கு "லவ் கெமிக்கல்ஸ்" என்று பெயர் வைத்து விட்டார்கள். இதிலொரு ஆச்சர்யம் இந்த வேதியியல் பொருட்கள் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்னணியில் இந்தக் காரணம் தான் இருக்கிறது என்கிறார்கள். மேற் சொன்ன லவ் கெமிக்கல்களை கட்டுப்படுத்த PEA என்கிற விஷயம்தான். 'லஸ்ட்' நிலையிலிருந்து 'லவ்' நிலைக்கு மாற்றுகிறது. எந்தப் பெண்ணையாவது திரும்பத் திரும்ப பார்க்கத் துடிக்கிறீர்கள் என்றால் ஏதோ பேய் பிடித்து ஆட்டுகிறது என்று நினைக்காதீர்கள். மூளையில். PEA பிடித்து ஆட்டுகிறது.
மேலே சொன்ன இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு தான் வருகிறது. 'அட்டாச்மெண்ட்' என்கிற மூன்றாவது நிலை.


ரெஸ்டாரண்டுகளில் சேர்ந்தே இருப்பது, காபி கடைகளில், பாங்குகளில், பார்க்குகளில், பீச்சுகளில் என எல்லா இடங்களிலும் பத்து டின் ஃபெவிக்காலை ஊற்றி பச்சக் என்று ஒட்டிவிட்டமாதிரி பலர் கிடப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அவர்கள் இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு வந்து விட்டவர்கள். அவர்களை இப்படி இருக்க வைப்பது இரண்டு ஹார்மோன்கள் ஒன்று ஆக்ஸிடோஸின் என்பது மற்றொன்று வாஸோப்ரஸின்.
ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் பக்க வாத்தியங்களை எழுப்பி மங்கல இசை உறவு உருவாவதில் என்டார் ஃபின்களும் பங்கு பெறுகின்றன.