"எப்படி முடிந்தது உன்னால்......"
புயலாய் இருந்த என்னை பூவாய் மாற்றினாய்..!
.காதலில் விழுந்தேன்...
கனவில் மிதந்தேன்....
காலையும் மாலையும் கனபொழுதில் காலடியில் கரைந்தன....!
வானம் நீ என்றேன்.....-
உன் வாசம் நான் என்றேன்.....!!
காதல் நீ என்றேன்...
என் காற்று நீ என்றேன்..!!
ஆசை நீ என்றேன்...
எனை ஆளும் தாய் என்றேன்...!!
அனைத்திற்கும் ஆம் என்றாய்.....
என்னை அரவணைத்து அன்பளித்தாய் .....!
ஊக்கமளித்தாய்...
உயர்வளித்தாய் ...
என் மனதில் எங்கும் நிறைந்தாய் ....!!
நம்பினேன் உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக...
தாய்க்கும் மேலாக - நடமாடும் என் தெய்வத்திற்கும் மேலாக...!!
என் உயிருக்கும் மேலாக..
என் உணர்விற்கும் மேலாக....
என் உலகத்திற்கும் மேலாக....!!
27 வருட தொப்புள் கொடி பந்தத்தை விட இரண்டே ஆண்டுகளில் முக்கியமானாய் நீ....!
உனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாரானேன் ....!
பித்தானானேன் .....
பைத்தியமானேன்...
கிறுக்கனானேன்...
வெறியனானேன்....
இன்னும் என்னநெனவோ ஆனேன் உன் மீது....!!
அர்ஜுனன் கண்ணனுக்கு
பறவையின் கழுத்து மட்டும் தெரிந்தது போல ......
எனக்கு நீ.. நீ .... நீ... மட்டும்தான் தெரிந்தாய் !!
உன்னை அடைவதை என் வாழ்கையின்
வெற்றியாய்...
குறிக்கோளாய்....
அர்த்தமாய் கருதினேன்...!
செயல்பட்டேன்....
புறப்பட்டேன்....!
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல
என்னை சுற்றியருந்த என் உலகத்தை...
கிழித்து கொண்டு பறந்தேன்... உன்னை நோக்கி....!
உன்னை சேரப்போகும் ஆசையில்...
கனவில்....
இனி எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாதென இறுமாந்தேன்...!
அன்பு..
பாசம்..
நேசம்..
பந்தம்...
பணம்...
பதவி...
எல்லாவற்றையும் தாண்டி வந்தேன்.....!
இதோ உன்னை அடையப்போகிறேன்....
உன்னிடம் வந்து சேரப்போகிறேன்...
இன்னும் சில மணித்துளிகளில் ....
என் மனம் ஆனந்த கூத்தாடியது....
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தேன்.....!!
"என்னருகில் நீ"
இந்த வாசகத்தை நினைத்தே பரவசமடைந்தேன்... !
பூரித்தேன்....பூத்து பூத்து போனேன்....
மகிழிச்சியின் உச்சியின் உச்சிக்கே சென்றுகொண்டிருந்தேன்....!!
தொட்டுவிடும் தூரத்தில் நீ....
ஈரேழு உலகத்திலும் இதுவரை யாரும் அன்பவிதிராத
ஒரு புதுவிதமான சந்தோஷத்தை அனுபவித்தேன்........!
அந்த புன்னகையோடு ...
பரவசத்தோடு....
பூரிப்போடு....
ஆசையோடு..
அன்போடு..
காதலோடு....
இன்பச்சிகரத்தில் வெற்றி கொடி நாடப் போகும் பெருமையோடு.....
ஒரு மாபெரும் படையினை வென்ற போர்வீரனின் வெற்றிபுன்னகையோடு...
பெருமிதத்தோடு.....
என் பனிப்பூவை...
தேவதையை ....
...
ஆசையை..
அன்பை...
அழகை..
உயிரை...
உணர்வை....
உறவை...
அப்பொழுது மலர்ந்த பூவை பறிக்கும் பக்தன் போல
அவளை நோக்கி . குனிந்தேன்....
அப்போது.....
.
.
.
.
.
.
.
.
.
எங்கிருந்தோ வந்த வார்த்தை ஈட்டி என் நடு நெஞ்சில் பாய்ந்தது....
பாய்ச்சியது வேறு யாருமல்ல.......
என் பனிமலர்தான்.....!!
பூவினும் மெல்லிய அந்த புது இத்ழகளிலிருந்து வந்த வார்த்தைகள் ......
கொடிய விஷத்தை விட கோடி மடங்கு கொடிய அந்த வார்த்தைகள்....
அந்த வினாடியே என் உயிரை உறிஞ்சி குடித்தன ..!
சயனைடு சாப்பிட்டால் கூட வினாடிகளில் தான் உயிர் பிரியுமாம்....
அவள் அந்த வார்த்தைகளை உதிர்த்த மாத்திரத்தில்
உதிர்ந்து விழுந்தேன் நான்.....!!
உலகச் சுடுகாட்டில் உயிர் பிணமாய் நான்...!!
என்னை கொல்ல என்னவள் பயன்படுத்திய ஆயுதம்...
" நீங்க உங்க அம்மா பாக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்குங்க..."
என் உயிரை உலுக்கிய வார்த்தைகள் இவை!
தமிழில் "உயிர்வலி" என்றொரு வார்த்தை உண்டு...
அதற்கான முழு அர்த்தத்தை அன்றுதான் உணர்ந்தேன் நான் !!
அந்த நொடி............
இன்னும் என்னை என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை.....!
என் கால் என் தலை மீது ஏறி அழுத்துமா??
என் கையே என் கழுதை நெரித்து கொள்ளுமா????
என்னால் நம்ப முடியவில்லை....!!
ஆனால்....
அதுதான் உண்மை.... !!
என் உயிர் என் உடலைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் அவை.....!
ம்ம்.......
காதல் என்றயே....
எனை உன் காதலன் என்றாயே...
கணவன் என்றாயே..
உன் உள்ளங்கவர்ந்த கள்வன் என்றாயே....
என்னை பிடிக்கும் என்றாயே...
உனக்காக என் இதயம் துடிக்கும் என்றாயே...
காதல் என்றாயே.... இன்று கானலாய் போனாயே.....!!
உனக்கும் உறுத்தும் என்பதால் உன் பெயரை கூட சொல்லாமல்
சொல்லுகிறேன் என் துயரத்தை ......!
. என் உணர்வை கொல்ல எப்படி முடிந்தது உன்னால்.......
எப்படி....????
ம்ம்ம்ம் ?????
இந்த உலகத்தில் எனக்கு விடை கிடைக்காத கேள்வி இது தான்.....
"எப்படி முடிந்தது உன்னால்....?"
இது உனக்காக மட்டும் நான் உருவாகிய வலைப்பூ .... கீழ கிளிக் பண்ணு..


0 comments:
Post a Comment
நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....