வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

ஜோக்ஸ் .......

ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தர், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் . 
பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் , 
அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது ,அந்த இருக்கைதான்

(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.


ஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்..பானர் சிங் ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். அவருக்கு டாய்லெட் போக வேண்டி இருந்தது. அங்கு கதவைத் திறந்தவுடன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விட்டு கதவைச் சாத்தி விட்டு வந்து விட்டார்.

இப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.

அந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார். உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றாரே பார்க்களாம்.

 
ஒரு முறை பானர் சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.
பக்கத்தில் நின்ற ஜக்கு சிங் "ஏன்.... என்ன நடந்தது ? " என்று கேட்டார்.
பானர் சிங்கும் நான் டெல்லிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.
 
"ஏன் அப்படி ? " என்று ஜக்கு சிங் கேட்டார்.
 
Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.

நம்ம பானர் சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து
டெல்லிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்லியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.
வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.

ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார். ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது " என்ன செய்வது 
முன்னால் போகும்
போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே" என்றாரே பார்க்கலாம்.

ஜக்கு சிங் அழுது கொண்டிருந்தார்.பானர் சிங் என்னவென்று கேட்டார்.

''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.
பானர் சிங் கேட்டார். "இப்போ என்ன நடந்தது."

"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....
ஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.
அதற்கு கடைக்காரர் பானர்சிங்கிடம் சர்தாருக்கு எல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பானர்சிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.
அதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.
சர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். 
கடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்


 சர்தாஜி ஒருவர் ரெயின் ஓட்டுனராக இருந்தார், அப்போ ஒரு முறை 200,250 பிரயாணிகளுடன் ரெயின் போய்கொண்டு இருக்கிறது அப்பொது திடிரெண்டு ரெயின் தண்டவாளத்தை விட்டு ஒரு தோட்டத்துக்குள் சென்று திரும்ப தண்டவாளத்துக்கு வந்த பொழுது அதில் இருந்த எல்லோரும் திடிரெண்டு ரெயினை நிறுத்தி அந்த சர்தாஜியை பார்த்து கேட்டாங்களாம் என்ன நடந்தது ஏன் தண்டவாளத்தை விட்டு விலகி தோட்டத்துக்கள்ள சென்றது எண்டு அதற்கு சர்தாஜி சொன்னாரம் ஒருத்தன் தண்டவாளத்தின் மேல நடந்து சென்று கொண்டு இருந்தான் அதுதான் எண்டாராம், 
அதற்கு பிராயணிகள் கேட்டார்களாம் இந்த ரெயினுக்க 200 பேருக்கு மேல இருக்கிறம் இவர்களை விட அந்த ஒருத்தனின் உயிர் முக்கியமா போச்சா உமக்கு எண்டு.. அதுக்கு உடன சர்தாஜி சொன்னாராம் 
எனக்கு அது தெரியும் பட் தண்டவாளத்தில போனவன் திடிரெண்டு ரெயினை கண்டுட்டு பக்கத்த இருந்த தோட்டத்துக்குள்ள ஓடிட்டான் எண்டாராம்

ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!
 

ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..
" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?" 

" மூளைக் காய்ச்சல்லே...!"
கடி ஜோக்ஸ் பகுதி 1

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............

பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.


நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

 
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும் 


நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
 
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...
""அடையாளம் சொல்லுங்க...
""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் ! 

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம் 

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார் 

நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
yaaldevi tool bar logo


கடி ஜோக்ஸ் பகுதி 2


கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"

"கோழியினால்தான் முட்டை வந்தது"

"எப்படி?"

"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை


ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,
'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. 
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். 

தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 
'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.


பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா. 
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்கநீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.


(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )

ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற
ஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.

ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.
ஒருவர் : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)

ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்
ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்

நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"