வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Wednesday

தீவு...... வேணுமா........ தீவு !?
                                          இப்போது வீட்டு மனை, பங்களாவைப் போல ஒரு தீவையே விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
     ஆம். ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநில கடல பகுதியில் உள்ள ஒரு தீவு விற்பனைக்கு உள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த தீவை கடந்த 2005ம் ஆண்டு 30.55 லட்சத்துக்கு வாங்கியது.
இந்த தீவை இந்நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளது. 2.35 கோடி முதல் 4.7 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதியான அழகான இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள இதில் பெங்குயின் உட்பட பல பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. பலவகை மீன்கள் மற்றும் சிப்பிகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும் இதில் உள்ளன. இவை அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
சாதாரண நிலத்தைப்போல இதை மதிப்பிட முடியாது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், இந்த தீவை சிறந்த பொழுதுபோக்கு மையமாக ஆக்க விரும்புகிறவர்களும் தொடர்பு கொள்ளலாம் எந ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிகாரி பால் ஒயிட் கிராஸ் தெரிவித்துள்ளார்.
நிலவை பிளாட் போட்டு விற்பனை செய்யும் காலம் அதிகதூரமில்லை.

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....