வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Tuesday

கோபப்படாதீர்கள்

மனிதர்களாய் பிறந்த எல்லோருக்கும்  கோபம் வருவது வழமை . கோபப்படுவது மனித இயல்பு . நாம் கோபப்படும் போது என்ன பேசுகிறோம் என்று தெரிவதில்லை . இந்த நரம்பில்லாத நாக்கினால் ஏதாவது இடக்குமடக்காக பேசி விடுகின்றோம் . அதற்க்கு பின்பு தான் நாம் இப்படி பேசி விட்டோமே என சிந்திக்கின்றோம் .
http://4.bp.blogspot.com/_q5nS4OXOc64/SDSzVOO18wI/AAAAAAAAAZk/IR-6DV0j0DM/s400/angry%2Bface.jpg
நாம் எண்ணியது நடக்காவிட்டால் , சொல்வதை யாராவது கேட்காவிட்டால்   நமக்கு   கோபம்  வருகிறது . கோபம் தற்காலிக உணர்வு என்றாலும் அந்த நேரத்தில் செயற்பாடுகளை நாம் உணர்வதில்லை .

 
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். எதனை பேசுவது என்று அவனுக்கு புரிவதில்லை இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
http://bkmacdaddy.com/blog/wp-content/uploads/2009/12/angry.jpg
ஒருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று கோபம் ஆகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன
 

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சி பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.
http://www.businesspundit.com/wp-content/uploads/2008/06/angry1.jpg
கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

அதிக கோபம் எமக்கு வரும்போது அதிக அளவு இரத்தத்தை இருதயம் பம் பண்ண வேண்டிஉள்ளது . இந்த கோபத்தால் மனமும், உடலும் தான் கெட்டு போகிறது .இந்த கோபத்தால் பணம் , பதவி, மரியாதை எல்லாமே போய் விடுகிறது .

நாம் சொல்வதை மற்றவர்கள்  மதிக்காத போதும் , நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போதும் , நாம் சொல்வது  தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போதும் , எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போதும் எமக்கு கோபம் வருகின்றது .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibmd2qYhzbf-xUPQC4AeaW9Jzyafl_zqrfZO5lBoqVzNgVjxp8cSNttik33leOHmOdz3Zshs7kF9lkVkveD-8pNGmmuOAIz6emSfCGLqUIfP5aqHHFpwJFJyFjzDvvEyjKk2BeJlUMcDQ/s400/6.13+angry+man.jpg
கோபத்தால் நாம் பல நோய்களுக்கும் ஆளாக வேண்டி  உள்ளது  .கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இதனால் மாரடைப்பு உண்டாகும் . இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு முதல் காரணம் கோபம் தான் .

சிலருக்கு கோபம் வந்தால் கையில் எது கிடைக்குதோ அதனால் எடுத்து எறிந்து விடுவார்கள் . அது கத்தியோ, மரக்குத்தியோ எதுவாக இருந்தாலும் சரி அதனால் எடுத்து அடிப்பார்கள் அல்லது எறிவார்கள்.
http://shrink4men.files.wordpress.com/2009/05/angry-woman.jpg
இந்த கோபம் வந்தால் நாம் எப்பிடி அடக்குவது ? அல்லது என்னதான் செய்யலாம் இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு  என யோசிக்கிறீர்களா அதற்க்கும் பலவழிகள் உண்டு .

தண்ணீர் குடியுங்கள் .

அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள் .

பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள் .
 
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலை படுத்துங்கள்.

கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். 

மெளனமாக இருங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள் . 

எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணுங்கள் .

முகத்தை கழுவுங்கள். அல்லது  குளியுங்கள் .
 
சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடவுங்கள் . நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள் .

http://www.weblo.com/asset_images/large/sucess.com_4848773b2f1de.jpg
இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம் .இவற்றில் ஒன்றை கடைப்பிடியுங்கள் . உங்கள் வாழ்வில் என்றுமே சந்தோசம் தான் நிலைத்து நிற்கும் . எதிலும் வெற்றி தான் .

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....