வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Saturday

தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழிதன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி


வெற்றி தான் வாழ்க்கை என்றால் மரணத்திடம் நாம் தோற்பது ஏன்...?
தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் தினம் திறப்பது ஏன்...?

பெரும்பாலானவற்றைப் போல வெற்றியும், தோல்வியும் மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு விடயமே. இந்த இரண்டை வைத்துக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை முடிவெடுக்க முடியாது.



வாழ்க்கை பாதைகளில் நாம் கடந்து செல்லும் சிறிய மேடு, பள்ளங்கலே வெற்றியும், தோல்வியும். இது கொஞ்சம் பழமையாக இருந்தாலும் இது தான் தன்னம்பிக்கையின் உண்மை.

இலக்கு என்பது ஒருவனுக்கு முடிவல்ல. அது எண்ணிக்கையற்றது. ஒரு இலக்கை அடைந்ததும் அதை விட சிறந்த இன்னொரு இலக்கு வரும். அதை நோக்கி புறப்பட வேண்டுமே தவிர என்னுடைய இலக்கு முடிவடைந்து விட்டது என்று நிலைக் கொள்வதல்ல.

வெற்றியடைந்த குதிரைக்கு தெரியும் அது ஏன் பந்தயத்தில் வெற்றி பெற்றது என்று. அதன் மீது சாட்டைகளால் ஏற்படும் வலிகளே அதற்கு காரணம். ஆம்,

வாழ்க்கை ஒரு பந்தயம், அதில் நாம் குதிரைகள், இறைவன் தான் நம்மை ஓட்டும் மேய்ப்பாளன். நம் வாழ்க்கையில் சாட்டை அடிகளால் ஏற்படும் வலிகள் அனைத்தும் நாம் வெற்றியடையவே.....!

வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப்பதை விட ஒருமுறையாவது விழுந்து எழுவதே சிறந்தது. எழாமல் விழுந்த இடத்திலே முடங்கி கிடந்து சாவது தான் கோழைத் தனம்.

என்னோடு கல்லூரி படிப்பை படித்த என் நண்பன், பெயர் சொல்ல விருப்பம் இல்லை.சமூகத்தின் மீது மிகுந்த அக்கரைக் கொண்டவன். வகுப்பில் பல உலக விடயங்களைப் பற்றி எப்போதும் அலசி கொண்டிருப்போம். அவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண்ணும் இவனை காதலித்து வந்தாள்.

இந்த விடயம் அறிந்த அவளது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு திடீர் என்று அவளுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். இதனால் என் நண்பனுக்கும் அவளுக்கும் தகராறு ஏற்ப்பட்டது.

என்னிடம் வந்து என்னை அவள் ஏமாற்றி விட்டாள் என அழுதுக் கொண்டே கூறினான்.
நானும் அவனுக்கு ஆறுதலாக, "விடுடா, எல்லாம் நன்மைக்குனு நினைச்சுக்கோ...!, ஒலுங்கா ஒரு நல்ல வேலைய தேடி, வாழ்க்கையில முன்னேரப் பாருடா" என ஊக்கம் கொடுத்தேன்.

சில நாட்களுக்கு பிறகு,

அவளுடைய திருமண நாளில், என் நண்பன் தொலைபேசியில், "அழுதுக் கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்றான்.

பதற்றத்துடன், "எங்கடா இருக்க.....!", என கேட்டேன்

மலையிலிருந்து குதிப்பதற்காக, மதுரையிலிருந்து கொடைக்கானல் மலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினான்.

"டேய் முட்டால், என்ன காரியம்டா பண்ணபோர, மொதல்ல, பஸ்ல இருந்து எறங்குடா, பைத்தியக்காரா...." எனக் திட்டினேன்.

ஒரு வழியாக பேசி அவனை சமாதானம் செய்வதற்குள் நானே பாதி செத்துவிட்டேன்.

இன்று அவன் ஒரு கணிப்பொறியாளனாக சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இன்று தற்கொலை என்பது ஒரு சாதாரண விடயம் ஆகிவிட்டது. ஆம்,

தேர்வில் தோத்தால் தற்கொலை, காதலில் தோத்தால் தற்கொலை, வணிகத்தில் தோத்தால் தற்கொலை என்று தோல்வியை ஒரு முடிவாக ஏற்று வாழ்க்கையயை முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது

இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு வேறு ஒரு உயிரை கொடுக்க உரிமை இருக்கே தவிர, அவனுடைய உயிரை எடுக்க அவனுக்கு உரிமை இல்லை.

ஒரு பழைய புதுமொழி,
"வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்ப்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்."

1 comment:

Sathosh said...

Good inspirational words...I agree to the above said facts. For more information about astrology. Log on to http://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that ' jaamakkol astrology software' has been introduced only by this website.

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....